புலவர் பலர் யாத்த பூந்தமிழ்ப் பாடல்களின் அணிவகுப்பு !

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 14 ஜூலை, 2022

மலர் (40) தனிப்பாடல் - தன்னையளித்தாள், தமையன் மனை !

தாயாக மதிக்கப் பட வேண்டியவர்கள் !

மகளிர் அனைவருமே தாய்மையின் வடிவங்கள் ! எனினும் தாய்மை என்னும் பண்பு வேறு; தாய் வேறு ! யார் யாரை எல்லாம் நாம் தாயாகக் கருத வேண்டும் ? ஒரு புலவர் பட்டியலிடுகிறார் பாருங்கள் !

-----------------------------------------------------------------------------------------

தன்னை யளித்தாள் தமையன்  மனைகுருவின்

பன்னி யரசன் பயில்தேவி  தன்மனையைப்

பெற்றாள் இவரையே பேசில் எவருக்கும்

நற்றாயர் என்றே நவில் !

-----------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல் !

-----------------------------------------------------------------------------------------

தன்னை  அளித்தாள்,  தமையன் மனைகுருவின்

பன்னி , அரசன்  பயில்தேவி,  -  தன் மனையைப்

பெற்றாள்இவரையே  பேசில்  எவருக்கும்

நற்றாயர்  என்றே  நவில் !

-----------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:-

--------------------------

தன்னை அளித்தாள் = தன்னைப் பெற்றவள் :  தமையன் மனை = தமையன் மனைவியாகிய அண்ணி;  குருவின் பன்னி = தனக்குக் கல்வி கற்பிக்கும் ஆசிரியரின் மனைவிஅரசன் பயில் தேவி = அரசனின் மனைவியாகிய அரசியார்;  தன் மனையைப் பெற்றாள் = தன் மனைவியைப் பெற்றவள்;  இவரையே பேசில் = ஆகியோரைப் பற்றிச் சொல்வோ மானால்எவருக்கும் = எல்லா ஆடவர்க்கும்;  நற்றாயர் என்றே நவில் = இவர்கள் தாய் போன்றவர்கள் ஆவர் !

-----------------------------------------------------------------------------------------

தன்னைப் பெற்றவள்தன் அண்ணிதன் ஆசிரியரின் மனைவிநாட்டின் அரசியார்தன் மாமியார் ஆகிய  ஐவருமே  தாய்” என்னும் உயர்ந்த இடத்தில் வைத்து  ஒவ்வொரு ஆடவராலும் வணங்கத் தக்கவர்கள் ஆவர் !

-----------------------------------------------------------------------------------------

இந்த அரிய பாடலை எழுதிய புலவர் யார் ? அவர் பெயரைப் பதிவு செய்ய வரலாறு தவறிவிட்டது !

வரலாறு தன் கடமையில் இருந்து தவறினாலும்நாம் இந்த ஐந்து தாயரையும் உயர்ந்த இடத்தில் வைத்து மதிப்பதில் தவறு செய்யலாகாது !

-----------------------------------------------------------------------------------------

 ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(maraimani2021@gmail.com)

ஆட்சியர்,

"தமிழ்ப் பொய்கை” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, ஆடவை (ஆனி) 30]

{14-07-2022}

-----------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக