தம்பிக்கு
எதிராக கைகளில் வில்லை ஏந்திடலாமா ?
இதைக் கேள்விப்பட்ட வீரராகவர், அபிராமனிடம் சென்று பரதனுக்கு எதிராக இராமன் போர் தொடுத்ததில்லை.
அபிராமன் தன் தம்பிக்கு எதிராக வில்லைக் கையில் எடுக்கலாமா என்று சொன்ன நல்லுரை
அபிராமனின் போர் முடிவைக் கைவிடச் செய்தது !
சிற்றரசன் அபிராமனை
இராமாயணக் கதை இராமனோடு ஒப்பிட்டு வீரராகவர் பாடிய பாடல் இதோ:
---------------------------------------------------------------------------------
வாழுமிலங்கைக் கோமானில்லை, மானில்லை !
ஏழுமரா மரமோ வீங்கில்லை - ஆழி
அலையடைத்த செங்கை யபிராமா வின்று
சிலையெடுத்த வாறெமக்குச் செப்பு.
---------------------------------------------------------------------------------
பொருளுரை:
------------------------
(அபி) ராமா ! நீ இலங்கைக் கோமான் இராவணனும் இல்லை; மாய மானை அனுப்பி சீதாபிராட்டியை ஏமாற்றியவனும் இல்லை; ஏழு மரா மரங்களுக்குப் பின்புறம் ஒளிந்திருந்து அம்பு விட்டு
வாலியைக் கொன்றவனும் இல்லை ! நீ இராமனில்லை; உன் பெயர் அபிராமன். சீர்காழி
நகருக்குள் கடல் அலை பெருகி வந்தமையால், அதைத் தடுக, தடுப்புச் சுவர் அமைத்து மக்களைக்
காத்தவன் நீ ! அத்தகைய மாட்சிமை பொருந்திய நீ உன் தம்பிக்கு எதிராக உன் கைகளில்
சிலையை (வில்) எடுக்கலாமா ? சொல் !
----------------------------------------------------------------------------------
சொற்பொருள்:
----------------------
வாழும் இலங்கைக் கோமான் இல்லை = இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும்
நீ இராவணனுமில்லை ; மானில்லை = மாயமானை அனுப்பி யாரையும் ஏமாற்றியவனும் இல்லை ; ஏழு மரா மரமோ ஈங்கு இல்லை = ஏழு மரா மரங்களும் இங்கு இல்லை ; ஆழி அலை அடைத்த = கடல் அலைகள் பெருகி வந்த போது அதற்குத் தடுப்புச்
சுவர் எழுப்பி காப்புச் செய்த நீ (இராமாயணக் காலத்து இராமனில்லை; இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் அபிராமன்) ; செங்கை அபிராமா
= சிவந்த கைகளையுடைய அபிராமா ; இன்று = இத்தகைய மாண்புடைய நீ
இப்பொழுது ; சிலை எடுத்த ஆறு = தம்பிக்கு எதிராக
உன் கைகளில் வில்லை ஏந்தியது ஏன் ; எமக்குச் செப்பு = எனக்குச் சொல்வாயாக
!
--------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(maraimani2021@gmail.com)
ஆட்சியர்,
”தமிழ்ப் பொய்கை” வலைப்பூ,
“திருவள்ளுவராண்டு: 2053, ஆடவை (ஆனி) 08]
{22-06-2022}
------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக